மாவட்ட செய்திகள்
பதிவேடுகள் தமிழில் இருப்பதே ஞாயமானது’- ஜிப்மரின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை எரிப்புப் போராட்டம்.
![]()
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் பதிவேடுகள் அனைத்தையும் இந்தியில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என ஜிப்மர் நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுற்றறிக்கையை எரிக்கும் போராட்டத்தை தமிழ் தேசிய பேரியக்கம் அறிவித்துள்ளது.]
இது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 29.04.2022 அன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால், இந்திய நாடாளுமன்ற ஆய்வுக்குழுவினரைக் காரணம் காட்டி, ஜிப்மரில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, இனி வருங்காலத்தில் அவற்றை இந்தியில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். இந்தியில் மருத்துவ நூல்களே இல்லாத நிலையில், ஜிப்மருக்காக வாங்கப்படும் மருத்துவ நூல்களில் 50 விழுக்காடு இந்தியில் இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ஜிப்மரில் இந்திக்காரர்களும் வெளி மாநிலத்தவரும் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காகவும், தமிழரிடையே இந்தியைத் திணிக்க வேண்டுமென்றும் இச்சுற்றறிக்கை திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
