மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் பாய்ந்து தனியார் எலக்ட்ரிசியன் பலி.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெள்ளாளன் கோட்டை பகுதியில் ஞான சிவசுப்ரமணியன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டதால் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் எலக்ட்ரிசியன் செல்லத்துரை என்பவர் மின்கம்பத்தில் ஏறி மின் வயரை சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மின் கம்பத்தில் தொங்கியபடி சம்பவ இடத்திலேயே தனியார் எலக்ட்ரிசியன் பலியானார் சம்பவம் அறிந்து விரைந்து வந்த கயத்தார் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின் கம்பத்தில் சிக்கி தனியார் எலக்ட்ரிசியன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
