BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளியில் பவானிசாகர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை பவானிசாகர் வட்டார வள மையம் சார்பில் அரசு தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்து மாற்று திறனாளி மாணவர்களும் தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களை பெறும் வகையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் பவானிசாகர் பேரூராட்சி தலைவர் திரு மோகன் அவர்கள் திறந்து வைத்தார். இதில் புதிய அடையாள அட்டை பெறுதல் பழைய அட்டை புதுப்பித்தல் UDID காடு பெறுதல் மற்றும் மருத்துவ முகாம் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 122 பேர் கலந்து கொண்டனர் இந்த மருத்துவமனைக்கு வந்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேல் சிகிச்சைக்கு இலவசமாக அனுப்பப்படும் என்றும் இங்கு வந்த மருத்துவ குழுவினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )