மாவட்ட செய்திகள்
மக்கள் நலப்பேரவையினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் கொடுத்தனர்.
தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம், தமிழக அரசின் திறந்தவெளி சிறைச்சாலைக்கு சொந்தமான, 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, 28 கட்டிடங்களை கட்டிய வழக்கில் உச்சநீதிமன்றம்,
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உத்தரவிட்டும்,
சாஸ்த்ரா பல்கலை கழக நிர்வாகம் இதுவரை நிலத்தை ஒப்படைக்காத நிலையில்,
திருமலை சமுத்திரம் பகுதியில் இந்த இடம் தமிழக அரசின் சிறைத் துறைக்கு சொந்தமானது என்கிற பெயர்ப் பலகையை சாஸ்த்ரா பல்கலைகழகத்தினர் அகற்றிவிட்டதாக மக்கள் நலப்பேரவையினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் கொடுத்தனர்.
31 ஏக்கர் நிலத்தையும் தமிழக அரசு மீட்டு, இந்த இடம் தமிழக அரசின் சிறைத்துறைக்கு சொந்தமானது என்று அடையாளப்படுத்திடவும் வலியுறுத்தினர்.
இது குறித்து ஜீவக்குமார் – வழக்கறிஞர்- மக்கள் நலப்பேரவை பேட்டி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.