மாவட்ட செய்திகள்
வீட்டில் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்!
காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்தனர் காட்பாடி தீயணைப்புத்துறையினர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த செங்குட்டை காந்திநகர் பேங்க் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜனார்த்தனன். அவருக்கு சொந்தமான வீட்டில் ஆறு அடி நீளமுள்ள சாரைபாம்பு ஒன்று புகுந்து உள்ளது. இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் பதறிப் போய் உள்ளனர். உடனடியாக அருகில் உள்ள காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் .அதன்பேரில் காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் மற்றும் பால்பாண்டி, பணியாளர்கள் பழனி ,சதீஷ்குமார் ஆகியோர் வீட்டில் படிக்கட்டில் தேவையற்ற பொருட்களுக்குள் மறைந்திருந்த சுமார் ஆறு அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர். அந்த குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.