BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம் பிரதம மந்திரியின் ஜல் ஜீவன் திட்டம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு அரசாங்கம் வழங்கி வருகிறது .

காட்டாவூர் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தில் 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
அதன்படி குழாய் போடும் வேலையும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் ஊழல் புதிதாக குழாய் இணைப்பு எடுத்து போடுமாறு அரசாங்கம் அறிவுரை கூறி இருக்கும் நிலையில் காட்டாவூர் ஊராட்சியில் குழாயை புதிதாக போடுவதற்கு பதிலாக இருக்கின்ற குழாயை மேலோட்டமாக நீக்கி புதிதாக குழாய் இணைப்பு போட்டு இருப்பதாக நாடகமாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ₹2,900 ரூபாய் மதிப்பில் புதிய குழாய் இணைப்பு போட்டு இருப்பதாக தெரிவிக்கிறாள் . அவர்கள் போட்டு இருக்கும் குழாய் குறைந்தது ₹150 ரூபாய் கூட தாண்டாது என்று மக்கள் குறை சாற்றுகிறார்கள்.

மே1 கிராம சபா கூட்டம்.

மே1 கிராம சபாவில் இந்த திட்டத்தைப் பற்றி கேட்டதற்கு காட்டாவூர் ஊராட்சிக்கு 9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள் இதில் 71.3% வேலை முடிந்து உள்ளதாக தெரிகிறது . இந்தத் திட்டத்தில் நடந்த ஊழலை பற்றி ஊராட்சி செயலாளரிடம் கேட்டதற்கு “ஏதோ நடந்து விட்டது இனி நடக்காது” என்று கூறுகிறார் . ஊராட்சி தலைவரின் கணவர் “நான் தான் போட்டேன் இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை” என்று கூறுகிறார். இதைப்பற்றி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். ஊராட்சி தலைவரின் கணவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீதும் பல முறைகேடுகளை பற்றி புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது இந்த வேளையில் இவர்கள் ஊழலில் ஈடுபட்டு உள்ளது இப்போது மக்களிடத்தில் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது … இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மக்கள் தீர்மானம் புத்தகத்தில் தலைவரின் கணவர் உமாபதி நிர்வாகத்தில் தலையிட கூடாது தலையிட்டால் தலைவர் பதவியை நீக்கம் வேண்டும் மற்றும் சொந்த ஊராட்சியில் செயலாளர்களாக 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜெகன் அவர்களை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று மக்கள் தீர்மானம் ஏற்றினார்கள்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )