மாவட்ட செய்திகள்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள பெண்களை கெளரவப்படுத்தும் வகையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள பெண்களை கெளரவப்படுத்தும் வகையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது,அதேபோன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அங்கு முன்பு JCI அமைப்பு சார்பில் உலக மகளிர் தினத்தில் கொண்டாடும் விதமாக பெண்களுக்கான உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பறை இசை அடித்து பேரணியுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பெண்களுக்கு கர்ப்ப பை வாய் புற்றுநோய் பிரச்சினையாக இருந்து வரும் நிலையில் இதை முற்றிலும் தீர்ப்பதற்காக HPV தடுப்பூசிகள் பயன்படுத்த வேண்டும்,பெண்கள் பாலியல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
என்றும் வில்லியம் மருத்துவமனை இயக்குனர்.திருமதி சூசன் வில்லியம் மருத்துவர் நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டு கொண்டார்.
இதில் ஆரம்ப சுகாதார துறை மருத்துவர் திருமதி.மஞ்சு,ஜேசிஐ நாகர்கோவில் தலைவி ஜெகதீஸ்வரி தலைமை தாங்கினார்,ஜேசிபி பிரஸ்ட் தலைவர்.ஜேசி. சுனிதா அகஸ்டின்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜேசி ஏஞ்சலா ஸ்டாலின் மற்றும் கல்லூரி மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.