BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி நீர்வளத்துறை செயற்பொறியாளர் காரை மறித்து வாழை விவசாயிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குடிமராமத்து பணி காரணமாக வாய்க்கால்களில் நீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வாழைக்கன்றுகள் விதைக்கு கூடிய பருவம் இந்த நேரத்தில் தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பது வாழை விவசாயிகள் மிகப்பெரும் இழப்பு ஏற்படும், ஆகையால் திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை ஒரு பதினைந்து நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி நீர்வளத் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் இன்று மனு அளிக்க வந்தனர் .

அப்போது அங்கு வந்த நீர்வளத் துறை செயற்பொறியாளர் மணி மோகன் காரை மறித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
விவசாயிகளின் மனுவை பெற்றுக்கொண்ட நீர்வளத்துறைசெயற்பொறியாளர் மணி மோகன் குடிமராமத்து பணிகள் நடைபெறுவதால் மட்டுமே தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேண்டுமென்றால் உங்களுக்காக பணியை நிறுத்திவிட்டு தண்ணீர் விட ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உய்யகொண்டான் வாழை உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் பேசுகையில் :-

வாழைக்கன்றுகள் விதைக்கு கூடிய பருவம் என்பதால் அதுவரை தங்களுக்கு தண்ணீர் வேண்டும் இல்லையென்றால் வாழைக்கன்றுகள் விலைக்கு வாங்கி தான் நடவு செய்யக் கூடிய நிலைமை ஏற்படும் வாழைக்கன்று ஒன்றின் விலை 25 ரூபாய் இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் .

சாலையோர கிளை வாய்க்கால்களில் குடிமராமத்து பணி செய்து விரைவில் தூர்வார வேண்டும் என தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )