BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றி விட்டு அமெரிக்காவிற்குத் தப்பிக்க முயற்சித்த தாய், மகளை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலகோடி ரூபாய் மோசடி - அமெரிக்கா தப்ப முயன்ற தாய், மகள்!:  ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

சென்னை வேளச்சேரி பரணி தெருவைச் சேர்ந்தவர் தன்ஷிகா(34). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வெளிநாடு சென்று வேலை செய்யலாம் என்று நினைத்து நண்பர் மூலம் சென்னை கோயம்பேட்டில் உள்ள (Assyst Career Generating Pvt Ltd) என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார்.

அங்கு கிளீனா கிரியேட்டர் (29) மற்றும் அவரது தாய் அனிதா கிரியேட்டர்(59) ஆகியோர் தன்ஷிகாவை போர்ச்சுக்கல் நாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி 25 லட்ச ரூபாய் பணத்தை 2020 ஜூன் மாதம் பெற்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் சொன்னது போல வேலை வாங்கித் தரவில்லை. இதனால் தன்ஷிகா வெளிநாட்டு வேலை என்ன ஆனது தொடர்ந்து வலியுறுத்தியதால் பல தவணைகள் மூலம் 11 லட்ச ரூபாய் திரும்பத் தந்துள்ளனர். இதன் பின் கிளீனா, அனிதா ஆகியோர் செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு அலுவலகத்தை மூடி விட்டு தலைமறைவாகினர்.

இது தொடர்பாக 2021 டிசம்பர் 21-ம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது. இதன் பின் அடையார் துணை ஆணையர் மகேந்திரனை கடந்த மாதம் தன்ஷிகா சந்தித்து நடந்தவற்றை கூறினார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்ய உத்தவிட்டதுடன், லுக் அவுட் நோட்டீஸ் அவர் வழங்கினார்.

இந்த நிலையில் கிளீனாவும் அவரது தாய் அனிதாவும் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தனர். கிளீனா அமெரிக்கா செல்ல இருந்ததாகவும், அவரது தாய் வழியனுப்ப சென்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அப்போது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்ததால் அவர்களை பிடித்து வேளச்சேரி போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீஸார், விசாரித்த போது, இவர்கள் இதுபோல் பலபேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இருவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற ஜாமீனில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )