மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி இன்று அரசு தலைமை மருத்துவமனையில் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுடன் மகளிர் தின விழா.
உலகமெங்கும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினமாக கடைபிடிக்கபட்டு பெண்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி இன்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுடன் மகளிர் தின விழா கொண்டாடினர்.
கேக் வெட்டி , அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் , செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகள், தாய்மார்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என அனைத்து பெணகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பெண் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கியும் அவர்களுடைய தாயிடம் நலம் விசாரித்து ஆலோசனைகளை வழங்கினார்.
முன்பு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகள் சார்பில் கவிதைப் போட்டி பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த மகளிர் தின விழாவில் அரசு மருத்துவமனை துணை இயக்குனர் மருத்துவர் ஜீவா உள்ளிட்ட அலுவலர்கள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.