BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த அபி மணி உயர்மின் அழுத்த மின்சார கம்பி திடீர்னு அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த அபி மணி(21) இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் வீட்டின் பின்புறம் வயல் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க செல்லும்போது உயர்மின் அழுத்த மின்சார கம்பி திடீர்னு அறுந்து விழுந்துள்ளது இதில் அபிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர் பின்னர் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )