மாவட்ட செய்திகள்
தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் மகளிர் தின நிகழ்ச்சிகள் பேரூராட்சி தலைவர் பங்கேற்று துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி- குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக பொறையார் டி.பி.எம்.எல். கல்லூரி மாணவிகள் புதிய பேருந்து முதல் பிரதான சாலைகள் வழியாக கல்லூரி வரை மகளிர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, தரங்கம்பாடி தூயதெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கல்ச்சுரல் மற்றும் கருத்தரங்கு கூட்டத்தில் பேரூர் நகர் மன்றத் தலைவர் சுகுண சங்கரி- குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா துவக்கப்பள்ளியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். பின்னர், சாதனை புரிந்த மகளிர் குழுக்களில் உள்ள 452 மகளிர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தரங்கம்பாடி தூய தெரசா கல்லூரியின் செயலாளர் மெட்டில்டா ஜோசபட், கல்லூரி முதல்வர் குமரேசன், சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டி ஆங்கில விரிவுரை துணை பேராசிரியை டாக்டர் ஃபிளாரன்ஸ், தரங்கம்பாடி புனித ஜான் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரோமினா, கலங்கரை இயக்குனர் அருட்திரு தந்தை குழந்தைசாமி, அருள்சகோதரி வெரோனிக்கா, திமுக பிரமுகரும், தொழில் அதிபருமான ஏகே சந்துரு, ஒன்றிய திமுக பிரதிநிதி சடகோபன், பேரூராட்சி திமுக நிர்வாகிகள் கந்தசாமி, சரவணன் துறை ராஜா ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.