மாவட்ட செய்திகள்
பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்ககோரி, வரும் 16,17 தேதிகளில், தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி துறையையும் பாதிக்கச் செய்வதால், பஞ்சு மற்றும் நுால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு இடைக்கால தடை விதிக்கவேண்டும். பஞ்சுக்கு இறக்குமதி வரி நீக்கியதுபோல், நுால் இறக்குமதிக்கும் வரி விலக்கு அளிக்கவேண்டும்.
உள்நாட்டு தேவைக்கு போக மீதமாகும் மூலப்பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும். பஞ்சு, நுாலை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்து, பஞ்சு பதுக்கலை தடுக்கவேண்டும்.
தமிழக நுாற்பாலைகள், கிலோவுக்கு 40 ரூபாய் பஞ்சு விலையை குறைக்கவேண்டும். பஞ்சு, நுால் விலைகளை கட்டுப்படுத்த கோரி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையில், வரும் 16, 17 தேதிகளில், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்பட தமிழகம் முழுவதும், பின்னலாடை, விசைத்தறி, ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தவேண்டும். அந்தந்த பகுதி சங்கங்கள், போராட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.
நிதி பற்றாக்குறையால் மூலப்பொருள் வாங்க முடியாமல் தவிக்கும் குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, அவசர கால கடன் வழங்கவேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஜவுளித்துறையினரின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று நிறைவேற்றித்தருவதாக எம்.பி.,க்கள் உறுதி அளித்தனர்.
இந்த தீர்மானத்தை, கோவை வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கவும் ஜவுளித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.