BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பிஜேபி யினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் மில்கேட் முன்பு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கன்டோன்மென்ட் மண்டல தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. மாநில இணை பொருளாளரும், திருச்சி மாநகர் மாவட்ட பார்வையாளருமான சிவசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ராம்ஜிநகர் பகுதியை மையமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா விற்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, உடனடியாக கஞ்சா விற்பனை தடை செய்ய காவல்துறையினர் முன்வர வேண்டும் மேலும் கஞ்சா.

விற்பனை ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகர், இல.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கள்ளிக்குடி ராஜேந்திரன், உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )