BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வாழ்வா ? சாவா ? போராட்டத்தில் பின்னலாடை தொழிலாளிகள்!

திருப்பூரின் தொழில் களம. என்பது ஒன்றோடு ஒன்று இணைந்த சங்கிலி தொடர் தான் , நூல் விலை ஏற்றம் தினசரி வாழ்வியலில் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விட போகிறது என்ற பொது கருத்மை புறந்தள்ளி பார்த்தால் கிடைக்கும் பதில் “மூடுவிழா காணும் சிறு குறு நிறுவனங்கள் தான்” நூலை & ஆடை தயாரிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இறுதி நிலையான மறுசுழற்சி-க்கு வந்தோமேயானால் உள்ளூர் சிறு , குறு & Domestic ஆர்டர்ளை கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தினசரி & வார செலவனங்களுக்காக கட்டிங் வேஸ்ட் எனப்படும் ஆடை தயாரிப்பு கழிவுகளை மறுசுழற்சிக்காக விற்று அன்றாட செலவினங்களை மேற்கொண்டு வந்தனர் , அது ஒரு பெரிய தொகையா என கேட்டால் ?! ஆம் அது பெரிய தொகை தான் ,

அப்படிப்பட்ட சிறு , குறு நிறுவனங்களின் பனியன் கழிவுகளை மட்டும் நம்பி கிட்டதட்ட 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வியலை நடத்தி வருகின்றனர் , அவர்களிடம் வேலை செய்யும் பணியாட்கள் குடும்பங்களை கணக்கில் கொண்டால் பல ஆயிரங்கள் வரும். இவர்களின் பங்கு என்னவென்றால் கம்பெனிகளில் எடுக்கும் கழிவுகளை தரம் வாரியாக , கலர் வாரியாக பிரித்து மறுசுழற்சி செய்யும் மில்களுக்கு வியாபாரிகள் வாயிலாக அனுப்பும் பணி..!!

ஆண்டு முழுவதும் குப்பையோ , பனியன் கழிவோ எடுத்து தரம் பிரிக்கும் சிறு , சிறு வேஸ்ட் குடோன்கள் கடந்த மூன்று மாதங்களில் பெருமளவு மூடப்பட்டு சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர் , இதற்கு காரணம் நூல் விலை உயர்வால் மூடப்பட்ட பல சிறு , குறு நிறுவனங்களே காரணம் ,

அதுமட்டுமின்றி OE மில்களுக்கு தேவையான கட்டிங் வேஸ்ட் பாதிக்கு பாதி தற்போது அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே நடத்தப்படுகிறது , இந்த சூழலின் காரணமாக உள்ளூர் சந்தை களையிழந்து விட்டு பலநாட்கள் ஆகிவிட்டது , அதுமட்டுமின்றி அண்டை நாடுகளிலும் இனி வரும் நாட்களில் பிற நாடுகளின் தேவைக்காக இங்கு அனுப்பப்படும் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.

திருப்பூர் முழுவதும் தொடர்ச்சியாக பனியன் உற்பத்தி நடைபெற்று தானே வருகிறது என பேசினால் , அந்த உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் பெரும் கோடிகளில் முதலீடு செய்து நடத்தப்பட்டு வருவதே இதற்கு காரணம் , அவர்களின் நீண்ட கால பையர்கள் & தொடர் உற்பத்தியால் மட்டுமே இந்த உற்பத்தி சாத்தியமாகிறது , அதுமட்டுமின்றி அவர்களின் உற்பத்தி யானை பசிக்கு சோழ பொறி போன்றது.

“பெரும் நிறுவனங்கள் எல்லாம் சொந்த நூற்பாலை கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தை எல்லாம் புறம்தள்ளிவிட்டு” யதார்த்த களத்திற்கு வருவோம் .

மிகை விலை ஏற்றப்பட்ட நூல் விலை என்று குறைகிறதோ , ஏற்றுமதி நிறுத்தப்பட்டு பதுக்கப்பட்ட பஞ்சு சந்தைக்கு வந்தால் ஒழிய மீண்டும் சிறு , குறு நிறுவனங்களும் அதை சார்ந்து இயங்கும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் , கழிவுகளை தரம் பிரிக்கும் குடோன்கள் மீண்டெழ முடியாது .

காலம் பதில் சொல்லும் என்ற கட்டத்தை தாண்டி , களம் கண்டு மத்திய , மாநில அரசுகளை நம் தொழிலில் உள்ள இக்கட்டான கள நிலவரத்தை உரிய துறைசார் அமைச்சர் , ஆட்சியாளர்களிடம் கொண்டு சென்று தீர்வு கண்டிட வேண்டும் , இதற்கு எடுக்கப்படுமர அனைத்து முன்னெடுப்புகளுக்கும் திருப்பூரில் உள்ள பனியன் சார்ந்த தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து மக்களும் இணைந்து போராட்ட களத்தில் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்..!

இவ்வாறு,
க.கோபாலகிருஷ்ணன்
திருப்பூர் மாவட்ட செயலாளர்,
மக்கள் உரிமைகள் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )