மாவட்ட செய்திகள்
பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கமிடமான சங்கமத் துறையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம்,
பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கமிடமான சங்கமத் துறையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழச்சி புதன்கிழமை நடைபெற்றது. மழை, வெள்ளம், புயல் போன்ற ஆபத்து காலங்களில் சிக்கி தவிக்கும் மக்களை எப்படி மீட்பது என்பதை குறித்து அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு ஏற்பாட்டில் தீயணைப்பு, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து நடத்திய ஒத்திகை நடைபெற்றது.

அதில், புயல் காலங்களில் கடலில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், ஆறுகளில் வெள்ளப் பெருக்கில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பது குறித்தும் ஒத்திகை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி கோட்டாட்சியர் நாரயணன், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் கமலஜோதி தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, மீன்வளத் துறை துணை இயக்குநர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
