BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பி உள்ள மாணவன் சூரிய அரசன் மருத்துவப் படிப்பை இந்தியாவில் தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

உக்ரைனில் மருத்துவம் படித்து 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் போர் காரணமாக தாயகம் திரும்பி உள்ள மாணவன் சூரிய அரசன் மருத்துவப் படிப்பை இந்தியாவில் தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தஞ்சை கருணாவதி நகர் மூன்றாவது தெருவில் வசிக்கும் முத்துகிருஷ்ணன் என்பவரின் மகன் சூர்யா அரசன் உக்ரைன் தலைநகர் கீவ்வில் மருத்துவம் ஐந்தாம் ஆண்டு முடித்த நிலையில் அங்கு போர் தீவிரம் அடைந்ததால் தற்போது தாயகம் திரும்பி உள்ளார், 5 ஆண்டுகள் வரை மருத்துவம் படித்தால் இதுவரை 50 லட்சம் வரை செலவு செய்து விட்டதாகவும் தற்போது உக்ரைனில் போர் தீவிரமடைந்து வருவதால் தங்களின் மேற்படிப்பு கேள்விக்குறியான நிலையில் உள்ளதாக தெரிவிக்கும் மாணவர் சூரிய அரசன், இந்திய அரசு நமது நாட்டிலேயே மருத்துவ படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இதேபோல் உக்ரேனில் இருந்து வரும் மாணவர்கள் அங்கு படித்து முடித்த காலம் போக மீதமுள்ள மருத்துவப் படிப்பை இங்கேயே படிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் பல லட்சம் ரூபாய் அங்கேயே செலவு செய்ததால் நன்கொடை இல்லாமல் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் மேலும் தங்களை தாயகம் திரும்ப அழைத்து வந்த மத்திய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு மீதமுள்ள தமிழக மாணவர்களும் உடனடியாக தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )