மாவட்ட செய்திகள்
ஒட்டுப்பட்டி- அரசுக்கு சொந்தமான பொதுப் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தரேவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டுபட்டி கிராமத்தில் வசிக்கும் கண்ணன் என்பவர் பொது இடத்திற்கு சொந்தமான பாதையை ஆக்கிரமிப்பு செய்து அதன் குறுக்கே சுவர்கள் எழுப்பி தன் வசப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சார்ந்து அய்யம்பாளையம் வருவாய்த்துறை அலுவலரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வருவாய் அலுவலர் உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவர் இன்னும் அலுவலகத்திற்கு வந்து உண்மையான தகவலை அளிக்கவில்லை எனவும் , அதுசார்ந்து வருவாய் அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்து வீட்டின் சுவற்றில் நோட்டீஸ் ஒட்டியும் சம்மந்தப்பட்ட தனிநபர் கண்ணன் கண்டுகொள்ளாமல் அரசுக்கு சொந்தமான இந்த பாதையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியரும் , துறைசார்ந்த அலுவலர்களும் நேரில் வந்து ஆய்வு செய்து அந்தப் பொதுப்பாதையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
