BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தொடரும் யானைகள் அட்டகாசம் அச்சத்தில் மலைகிராம மக்கள் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலான ஆடலுர், பன்றிமலை. கே சி பட்டி .பாச்சலூர். பள்ளத்துகால்வாய். தாண்டிக்குடி. மங்களம்கொம்பு குப்பம்மாள் பட்டி அண்ணா நகர் உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் தொடர்ந்து பல குழுக்களாக யானைகள் மலைப் பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் விவசாய பகுதிகளிலும் அட்டகாசம் அதிகரித்து வருகிறது

குறிப்பாக விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதி அதிக வாகனங்களும் மக்களும் செல்லும் சாலைகளில் யானைகள் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் பொதுமக்களை அச்சுறுத்திய குட்டை கொம்பன் யானையை பிடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் கலீம்.சின்னதம்பி என்ற 2 கும்கி யானைகள் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது வரை யானையைப் பிடிக்க முடியாமல் கன்னிவாடி அருகே உள்ள முத்துப்பாண்டி கோயில் அருகே மலை அடிவாரத்தில் காத்திருக்கின்றன

இந்நிலையில் KC பட்டி பகுதியில் காலை 9 யானைகள் சுற்றி வந்ததாக பொதுமக்கள் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

மேலும் தாண்டிக்குடி பகுதியில் யானைக்கூட்டம் வந்ததால் வேலைக்கு சென்றவர் யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக அருகிலிருந்த மரத்திலேறி வீடியோ எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது தொடர்ந்து யானைகளின் அட்டகாசத்தால் கொடைக்கானல் கீழ்மலை கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர் ஆகவே மாநில அரசும் மாநில வனத்துறையும் நடவடிக்கை எடுத்து அதிக அளவில் வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுக்கல் மூலம் யானையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )