BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு.

சென்னை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையரால் நடத்தப்பட்ட காணொளி ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், நியாயவிலை கடைகளுக்கு வரும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும் என்றும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசியானது தரமானதாக இருக்க வேண்டும் என்றும், அதனை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலருடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் வியாழக்கிழமை தரங்கம்பாடி வட்டத்திலுள்ள கிடாரம்கொண்டான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அரிசியின் தரம் குறித்தும் அதனுடைய எடை அளவு குறித்தும் ஆய்வு செய்தார். நடப்பு மாதமான மே மாதத்தில் தரமான அரிசி தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்றும், இது அடுத்தடுத்த மாதங்களுக்கும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும் என்றும், அனைத்து அத்தியாவசிய பொருட்களும் முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ராகவனிடம் கிடங்கிலிருந்து நகர்வு செய்யப்படும் அரிசிகள் தரமானதாகவும், அதனையே நியாயவிலை கடைகளுக்கு நகர்வு செய்யப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேற்படி ஆய்வின்போது தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, எழுத்தர் மணிகண்டன், நகர்வு எழுத்தர்கள் பிரதீப் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )