மாவட்ட செய்திகள்
108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருத்தேர் பவனி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க தற்பொழுது நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசை சேர்ந்த திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் கடந்த 6ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான இன்று 48 அடி உயரமும், 21 அடி அகலமும் 75 டன் எடை கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக நகராட்சி நிர்வாகம் பொதுப்பணித் துறை தீயணைப்புத் துறை, பிஎஸ்என்எல், மின்சார துறை மற்றும் வீரராகவர் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தேரடியில் அமைந்துள்ள தேரினை பார்வையிட்டு தேரின் பராமரிப்பை குறித்து ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் ஆகியோர் திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில் தேர் செல்லும் முக்கிய சாலையான பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட தெருக்களில் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் உள்ளனவா? தேர் செல்லும் பாதையில் மின் வயர்கள் அருகாமையில் செல்கின்றனவா என்பது குறித்து நேரில் ஆய்வு ஆய்வு செய்து செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று தேர் பவனி செல்லும் வீதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திருத்தேர் பவனி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது
கொரோனா தொற்றின் காரணமாக 2 ஆண்டுகள் திருத்தேர் பவனி நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது திருத்தேர் பவனி நடைபெற்று வருவதால் வழக்கமான பக்தர்களை காட்டிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தற்போது கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் ஸ்ரீ வீரராகவ பெருமானை தரிசித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.