BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மீண்டும் திறப்பு!! மாணவர்கள் உற்சாகம்!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டம் ஓய்ந்ததால் இந்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தமிழக அரசு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றி அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களிடம் முதலாம் ஆண்டு கட்டணமாக ரூ.13 ஆயிரம் மட்டும் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டது.

 

முதலாம் ஆண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் கல்விக்கட்டணம் என்று அறிவித்து வசூலிக்கப்பட்டது. ஒரு கல்லூரியில் இரண்டு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதற்கும், மற்ற அரசு கல்லூரிகளை போலவே இங்கும் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 11ம் தேதி முதல் 2ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் 3ம் ஆண்டு மாணவர்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் கடந்த மாதம் ஏப்ரல் 25ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிலும் முதலாம் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் உடனடியாக அறையை காலி செய்யவும் அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆனால் மாணவர்கள் இந்த உத்தரவை ஏற்க மறுப்பு தெரிவித்து, விடுதியை விட்டு வெளியேறாமல் மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் கார் ஷெட்டிலேயே தங்களது கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.மாணவர்கள் போராட்டம் விடாமல் தொடர்ந்தபடியால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. எனவே கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி உடனடியாக திறக்கப்படும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவர்களின் விடுதிகள் இன்று மாலை முதல் இயங்கத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு திரும்புமாறு கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.போராட்டம் முடிவுக்கு வந்து கல்லூரி மீண்டும் இயங்க உள்ளது மாணவர்களிடையேயும், பொது மக்களிடையேயும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )