BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

2ஆண்டுகள் பின்னர் நடைபெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்.

தென்கயிலாயம் எனப்போற்றப்படுவதும், 274சைவத்தலங்களுக்குள் ஈடுஇணையற்றதாகவும் சிறப்புபெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், கொரோனா பெருந்தொற்று காரணமாக 2ஆண்டுகள் திருவிழா நடைபெறவில்லை, நடப்பாண்டு சித்திரை திருத்தேரோட்ட விழா கடந்த 05ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதுடன் தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாளும், தாயுமானவர் (சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர்.

தொடர்ந்து 09ம்தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், 10ம்தேதியன்று திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்துவந்தார்.


விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது, மேஷலக்னத்தில் மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச் சென்றனர். நான்கு சித்திரை வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னர் தாயுமானவர் சன்னதிக்குச் சென்றடைந்தார்.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம்கண்டனர். விழாவையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )