மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் கந்தமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கந்தமங்கலம் கிராமம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், மணிமேகலை தம்பதியினர். சண்முகசுந்தரம் ஆந்திராவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சன்சிகா(9),சுஜி(8), இரண்டு மகள்களும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று சன்சிகா மற்றும் சுஜி ஆகியோர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஆயிகுளத்தில் மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது ஷன்சிகாவும், சுஜியும் தவறி குளத்தில் விழுந்தனர். குளத்தில் குறைவாக தண்ணீர் இருந்தாலும், சேரும் சகதியாகவும் இருந்ததால் சேற்றில் சிக்கி இரண்டு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உடனடியாக குத்தாலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையின் உடல் உடல்கூறு ஆய்வுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
