BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி கொடுப்பதாக ரூ. 6 லட்சம் மோசடி!! போலீஸ் விசாரணை.

சேலம் கிருஷ்ணம்மாள் நகரைச் சேர்ந்த சரவணன் என்பவருடைய 19 வயது மகள் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்பவர் சரவணன் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். அதில், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டிரஸ்டி மூலம் இலவசமாக சீட் வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து, அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது, தான் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், அதன்மூலம் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அனந்தபூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுக்க ரூ. 6 லட்சம் லட்சத்தை தனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்படி கூறியுள்ளார். மகளுக்கு எப்படியாவது எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தால் போதும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சரவணன், ஹர்ஷவர்தன் கேட்டபடியே ரூ. 6 லட்சத்தை அவரின் வாங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.

ஆனால் ஹர்ஷவர்தன் உறுதி அளித்தபடி சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை சரவணன் தொடர்பு கொண்ட போது அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அதிர்ச்சியடைந்த சரவணன், சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )