மாவட்ட செய்திகள்
நடத்துநர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் – அரசு பேருந்துக்கள் நிறுத்தம்!!
கல்லூரி மாணவர்கள் தாக்கியதால் 50 பேருந்துகளை இயக்காமல் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேக்குளத்திலிருந்து விருதுநகர் நோக்கி சென்று அரசு பேருந்தில், கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றால், நடத்துநர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓட்டுனர் மற்றும் நடத்துநரை தாக்கியதாக தெரிகிறது.
இதன் காரணமாக 50 பேருந்துகளை இயக்காமல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காவல்துறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததால் போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது.