BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சர்வதேச அருங்காட்சியக தினமான மே-18 யை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 5 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்காக, எதிர்வரும் 18-05-2022 புதன்கிழமை ஒரு நாள் திறன் ஊக்க பயிற்சி முகாம்.

சர்வதேச அருங்காட்சியக தினமான மே-18 யை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 5 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்காக, எதிர்வரும் 18-05-2022 புதன்கிழமை ஒரு நாள் திறன் ஊக்க பயிற்சி முகாம் வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களின், கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு அடிப்படை ஓவியம் வண்ண ஒவியம், ஓவியங்களின் வகைகள், பயனற்ற பொருட்களை கலைப்பொருட்களாக மாற்றுதல், வாழ்த்து அட்டை தயாரித்தல் உள்ளிட்ட திறன் ஊக்க பயிற்சி, ஓவிய ஆசிரியர்களால் வழங்கப்பட உள்ளது.

ஓவியத்தில் ஆர்வமுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும், மாணவ மாணவியர்கள் 17-05-2022 -க்குள் தங்களது பெயரை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பெயரை பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே பயிற்சி முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவ! பெகுமாரவேல் பாண்டியன், தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )