BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

15 கிலோ கஞ்சா கடத்தல்: 2 பெண்கள் கைது!

காட்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்தில் கடத்திச் சென்ற 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை தமிழக ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீசார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சமுத்திரம் காலனி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலைவாணி, அதேபோல் சமுத்திரம் காலனி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனியம்மாள் ஆகிய இருவர் 15 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கலைவாணி மற்றும் முனியம்மாள் கைது செய்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட கலைவாணியின் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )