மாவட்ட செய்திகள்
இலங்கை மன்னன் விக்கிரமராஜ சிங்கேவின் வேலூர் கல்லறையில் டிஆர் ஓ ஆய்வு!
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜ சிங்கேவின் கல்லறை , குடும்பத்தினரின் கல்லறையை வேலூர் மாவட்டம் சார்பில் புதுப்பிக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் பாலாற்றங்கரையோரம் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்கிரமராஜ சிங்கே வேலூர் கோட்டையினுள் சிறை வைக்கப்பட்டு குடும்பத்தினருடன் ஆங்கிலேயர் ஆட்சியில் பலியானார்கள். அவர்களின் அனைத்து குடும்பத்தினரும் பாலாற்றங்கரையில் புதைக்கப்பட்டு சமாதிகள் அமைக்கப்பட்டது. இவைகள் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது அந்த இடங்களில் கல்லறை அமைக்கப்பட்டு முத்துமண்டபம் அமைத்து திறந்து வைத்தார் .சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இருந்தது. நாளடைவில் இது பராமரிக்கப்படாததால் பழுதடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு அதனை புதுப்பிக்க பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்றதாக தெரிகிறது. வேலூர் பொலிவுறு திட்டத்தின் கீழ் (ஸ்மார்ட் சிட்டி ) திட்டத்தில் இதனை புதுப்பிக்க மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி,மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முத்துமண்டபம் பகுதியில் நேரில் ஆய்வு செய்து மேற்கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.