மாவட்ட செய்திகள்
பொ. மல்லாபுரம் பகுதிகளில் திமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.
தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது திமுகவினர் 8 வேட்பாளர்களும் பாமக 3 வேட்பாளர்களும் விசிக வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் பொ.மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு திமுக தலைமை கழகம் ஒதிக்கி அறிவித்து இருந்த நிலையில் 13வது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாந்தி புஷ்பராஜ் கடந்த 4ஆம் தேதி தலைவர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பு மூலம் தன்னுடைய திமுக ஆதரவாளர்களுடன் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தனர் .இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 4 வது பொது வார்டு கவுன்சிலர் சின்னவேடி தலைமையில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து தலைமை கழகம் அறிவித்தது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு பேரூராட்சி தலைவர் பதவியை தர வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திமுக தொண்டர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பையும் மீறி திமுகவுக்கு தான் நாங்கள் ஓட்டு அளித்தோம் அதனால் திமுக தலைமை தான் எங்களுக்கு வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய திமுக சார்பில் பொ. மல்லாபுரம் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் பொம்மிடி பேருந்து நிலையம் ரயில் நிலையம் மேம்பாலம் முக்கிய கடைவீதிகளில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பாக காணப்பட்டது.