மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா.
தஞ்சை பெண்கள் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில் தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் வழக்கறிஞர் விவியன் அசோக் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை அனிதா பரிமளா பூரனி, மண்டலம் 6-ன் துணை ஆளுநர் பெலிக்ஸ் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலாளர் சுஜாதா கலந்துகொண்டு மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்று குறித்து விளக்கி பேசினார்.
விழாவில் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா, ரோட்டரி சங்க பொருளாளர் நாகராஜன் மற்றும் ஏராளமானோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் இலக்கு மணசாமி நன்றி கூறினார்.
CATEGORIES தஞ்சாவூர்