மாவட்ட செய்திகள்
தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் தஞ்சை பாரத் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் தஞ்சை பாரத் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மகளிர் தின விழாவில் டாக்டர். சாத்தப்பன் தலைமையில் பாரத் கல்லூரி செயலாளர் திருமதி. புனிதா கணேசன் தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் டாக்டர் உஷா நந்தினி விஸ்வநாதன் ஆகியோர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர்.
இராஜா மிராசுதார் மருத்துவமனை நிலைய மருத்துவர் டாக்டர். உஷா தேவி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். ஸ்ரீவித்யா, ஆர்க்கிடெக்ட் மனோன்மணி மகேந்திரன், டாக்டர் ரேகா ராஜ்மோகன், வழக்கறிஞர் திருமதி. லட்சுமி ஸ்ரீ, காவல்துறை உதவி ஆய்வாளர் திருமதி. அபிராமி, வருவாய் ஆய்வாளர் திருமதி. அனுராதா, தொழில் துறை பெண் உரிமையாளர் திருமதி. வனிதா கண்ணன், யூடுயூபர் திருமதி. சசிகலா முத்துக்குமார் மகளிர் குழு, அங்கன்வாடி, மாநகராட்சி, மருத்துவக் கல்லூரி பிரதிநிதிகள் உள்ளிட்ட 33 மகளிருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழுடன் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பங்கேற்ற மகளிர் அனைவரும் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் முனைவர். முத்துக்குமார், திரு. சந்திரமௌலி, திரு ராஜா, பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக தனுவர்ஷன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.