மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்கில் பணம் திருடிய வாலிபர் கைது.
கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்கில் பணம் திருடிய வாலிபர் கைது – இருசக்கர வாகனம் பணம் பறிமுதல் – பெட்ரோல் பங்கில் திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் முத்துராமலிங்கம் (65) இவர் மார்க்கெட் பகுதியில் தன்னை பட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் மகன் ரமேஷ்குமார் என்பவர் மீது
வழிமறித்து தன்னை மிரட்டி பணம் பறித்ததாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் முத்து ராமலிங்கம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் பணத்தை பறித்ததும் மேலும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணம் சுமார் 8,000/-ரூபாய் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும்
பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் பணத்தை திருடியது ரமேஷ்குமார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து ரமேஷ் இடம் இருந்து 6000/- ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து விளாத்திகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.