மாவட்ட செய்திகள்
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு.
திருப்பூரில் ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிக்குன் குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் பொதுமக்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிக்கன் குழு செயல்பட்டு வருகிறது.இந்த குழுவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் விழி கண் குழுவில் உள்ளவர்கள் பொதுமக்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாகவும் அரசின் பெயரை பயன்படுத்தி மோசடியில் எடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்.தமில்வெந்தன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. மேலும் ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிக்கன் குழு உறுப்பினர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விழிக்கன் குழு நிர்வாகிகளை மாற்றி அமைக்காவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர். பழ.சண்முகம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர். துரை வளவன், வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர். ஏ.பி.ஆர்.மூர்த்தி, ஈரோடு மாவட்ட பொருளாளர். மிசா.தங்கவேல், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர். கனகசபாபதி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.