BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் தமிழ்நாடு சட்டபேரவையின் பொதுநிறுவனங்கள் குழுவினர் ஆய்வு.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ராஜா எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் ஏற்காடு படகு இல்லம், உண்டு உறைவிட பள்ளி மற்றும் அரசினர் தங்கும் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். படகு இல்ல ஏரியை ஆய்வு செய்த குழுவினர், சுற்றுலா பயணிகள் மகிழும் வகையில் ஏரியை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றனர். மேலும் ஏரியில் கழிவு நீர் கலக்கும் பகுதிகளையும் பார்வையிட்ட குழுவினர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கையை விரைவில் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதில் குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, சேகர், தளபதி, நிவேதா முருகன், பாலாஜி, ரூபி மனோகரன், ஜெயக்குமார் மற்றும் சிறப்பு பணி அலுவலர் ராஜா, குழு அலுவலர் ரவிச்சந்திரன், சார்பு செயலாளர் வளர்வேந்தன் மற்றும் ஏற்காடு எம்எல்ஏ சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )