மாவட்ட செய்திகள்
76 – மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வலியுறுத்தி 24-ம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
76 – மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வலியுறுத்தி 24-ம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு 76-மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வலியுறுத்தி வருகிற 24-ம் தேதி சென்னையில் அனைத்து சங்கமும் இணைந்து மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாகர்கோவில் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர் கூட்டமைப்பு நாகர்கோவில் மண்டல் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் ராணி தோட்டம் அருகில் உள்ள ஆர்.சி.பிஷப் இல்ல வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் 76. மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி யைஉடனே வழங்க வேண்டும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தையும் ,2020 மே மாதம் முதல் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியில் இறந்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை உடனே வழங்க வேண்டும் ,14 வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும் ,மேற்படி தீர்மானங்களை விரைவில் நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் மார்ச் 24-ம் தேதி அனைத்து சங்கங்களும் இணைந்து சென்னையில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 85 ஆயிரம் ஓய்வுபெற்றபோக்குவரத்து தொழிலாளர்கள் குடும்ப வாழ்வாதாரம் மேம்பட அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத் தலைவர் தினகராஜன், துணைச் செயலாளர் ஹென்றிறி,நிர்வாக குழு உறுப்பினர்கள் மரியதாஸ் ,ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் மோகன சந்திரன், வள்ளியூர் முருகன், முத்துகிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் 200க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.