மாவட்ட செய்திகள்
அரசு பள்ளி மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
அரசு பள்ளி மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
நடை பாதையில் நடப்போம் நலமுடன் பயணிப்போம், படியில் பயணம் நொடியில் மரணம் என்பது போல பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்பு.
சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டா பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1200க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர் இன்று மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுந்தர் மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற தலைவர் சுபப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையிலேந்தி பள்ளி வளாகத்தில் இருந்து பள்ளிகொண்டா குடியாத்தம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு சாலையில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது மாணவிகள் சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி, போதையில் பயணம் பாதையில் மரணம், படியில் பயணம் நொடியில் மரணம், நடைபாதையில் நடப்போம் நலமுடன் பயணிப்போம் என்பது போல பல்வேறு விதமான கோஷங்களை எழுப்பியும் இதுபோன்ற பதாகைகளை கையில் ஏந்தியும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர்.