BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மேகமலை வனப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் 105 பேர் போலீசாரால் கைது.

மேகமலை வனப்பகுதியில் இருந்து தங்களை வெளியேற்றக் கூடாது என்றும், மீண்டும் விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் 105 பேர் போலீசாரால் கைது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை தும்மக்குண்டு ஆகிய கிராம பஞ்சாயத்திற்கு 38 மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதி கடந்த 2021 ஆம் ஆண்டு மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதாள். இப்பகுதியில் விவசாயம் செய்ய தடை விதித்த வனத்துறை இவர்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் அவ்வப்போது பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . இன்று கடமலைக்குண்டு பேருந்துநிலையம் முன்பாக கூடிய பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களை வனச்சரகத்தில் இருந்து வெளியேற்றக்கூடாது என்றும் மீண்டும் தங்களை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் வெயிலில் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முன் அனுமதி பெறாமல் போராட்டம் செய்வதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . ஆனால் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் 105 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர். இச்சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.comhttp://aramseithigal.inhttp://aramnews.in

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )