மாவட்ட செய்திகள்
ஒடுகத்தூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

ஒடுகத்தூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி பள்ளியில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் துர்கா ராணி தலைமை தாங்கி துவங்கி வைத்தார்.

விழாவிற்கு, உதவி தலைமை ஆசிரியர் பாண்டியன், உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியானது, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பஸ்நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது. இதில், பேரணியை மாணவர் காவல்படை பொறுப்பு ஆசிரியர்கள் சுகந்தி, சத்தியாவதி வழி நடத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
