மாவட்ட செய்திகள்
ஆத்தூர்- சித்தையன் கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்தாய்வு சங்கக் கூட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் திறன்கள் பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீட்டிலும் வீட்டுப்பாடங்கள் ஒழுங்காக செய்கின்றார்களா? அவ்வாறு செய்யாவிடில் அவர்களை படிக்க செய்யுமாறு பெற்றோர்களை ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியானது தலைமையாசிரியர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. உடன் பெற்றோர் சங்க தலைவர் ரபீக் மைதீன், பேரூராட்சி மன்றத் தலைவர் போதும் பொண்ணு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு , மருத்துவர் சௌந்தர்யா, காமாட்சி,18வார்டு உறுப்பினர்கள் வினோத்குமார், சுரேஷ்குமார் , சரவணகுமார் உட்பட பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
