மாவட்ட செய்திகள்
ஆத்தூர்- நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஆத்தூரில் ஐ .ஆர் 51 ரக நெல் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். தற்சமயம் அறுவடை தொடங்கி விட்ட நிலையில் ஆத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையேற்று ஆத்தூரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவிட்டார். அதனையடுத்து ஆத்தூர் வட்டாட்சியர் சரவணன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், பட்டதாரி சங்கத்தை சேர்ந்த மவுலானா, அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் தொடங்கி தரமான நெல் ஒரு கிலோ ரூபாய் 20.60பைசாவுக்கும் சிறிது தரம் குறைந்த நெல் 1கிலோரூபாய் 20.15 பைசாவுக்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் காலதாமதம் இன்றி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்ட அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் அவர்களுக்கும் நெல் விவசாயிகள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பாக நன்றிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
