BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் 13-ஆம் தேதி நடக்கிறது.

உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் ராஜகோபுரம் மற்றும் ரேணுகாதேவி கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
உடுமலை திருமூர்த்தி மலை செல்லும் வழியில் பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பத்மாவதி தாயார் ஆண்டாள் நாச்சியார் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.
மேலும் லட்சுமி ஹயக்ரீவர் சக்கரத்தாழ்வார் லட்சுமி நரசிம்மர் தன்வந்திரி விஷ்வக்சேனன்ஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்கள் சீனிவாச கல்யாணம் காட்சி அர்த்த மண்டபம் மகா மண்டபம் என அமைந்துள்ளது.


இந்த கோயிலுக்கு ஐந்து நிலைகளுடன் 69 அடி உயரத்தில் முழுவதும் கல்லால் ஆன இருபுறமும் அமிர்த கலச கருடாழ்வார் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளனர்.
மேலும் ராஜகோபுரம் முன் பீடத்துடன் ஒரே கல்லினால் ஆன 23 அடி கருட கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தென்புறம் ரேணுகா தேவிக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி கோவில் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் வரும் 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்குகிறது.
12ஆம் தேதி காலை 9 மணி மற்றும் மாலை 3 மணிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது.
13-ஆம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜையும் எட்டு முப்பது மணிக்கு நிறைவேள்வி யாத்ரா தானம் கும்பம் புறப்பாடு நடக்கிறது.
அன்று 9:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )