மாவட்ட செய்திகள்
உலக சிறுநீரக தினத்தினை முன்னிட்டு தஞ்சாவூரில் மாநகராட்சி ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உலக சிறுநீரக தினத்தினை முன்னிட்டு தஞ்சாவூரில் மாநகராட்சி ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.


உலக சிறுநீரக தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 10ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது, இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறுநீரக நோய் விழிப்புணர்வு பரிசோதனை மருத்துவ முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது,


இம்முகாமில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர், இம்முகாமில் ரத்த அழுத்தம், ரத்த மாதிரி பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்டது,


இந்நிகழ்ச்சியில் துணைமேயர் டாக்டர் அஞ்சுகம், நகர்நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், இந்திய மருத்துவ சங்க தலை தலைவர் டாக்டர் பாரதி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட மருத்துவர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
