மாவட்ட செய்திகள்
மடத்துக்குளம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு காய்கறி தோட்டம் அமைக்க விதைகள் வழங்கும் விழா.

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், மைவாடி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு காய்கறி தோட்டம் அமைக்க விதைகள் வழங்கும் விழா மற்றும் சமுதாய முதலீட்டு கடன் உதவி வழங்கும் விழாவானது மைவாடி ஊராட்சியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கே. ஈஸ்வரசாமி அவர்கள் கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி மற்றும் காய்கறி விதைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மேலும் வட்டார மேலாளர் கவிதா மைவாடி ஊராட்சி செயலர் முகமது இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
