BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கழுத்தில் கிடந்த ஒன்னரை பவுன் தங்க நகை பறிப்பு.

தஞ்சை பாத்திமா நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 47). சம்பவத்தன்று இவர் தனது சகோதரி மகளை அழைத்து கொண்டு நடந்து சென்றார். அப்போது பாத்திமா நகர் அருகே சென்றபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். திடீரென அவர்களில் ஒருவன் ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த ஒன்னரை பவுன் தங்க நகையை பறித்தான். இதையடுத்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டார். அதற்குள் அவர்கள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து ராஜேஸ்வரி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )