மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஹட்சன் பால் நிறுவன தொழிலாளர்கள் பணி மாறுதல் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.
கிருஷ்ணகிரி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு இந்திய தொழிற்சங்க மைய தருமபுரி மாவட்ட குழு சார்பில் பாலக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஹட்சன் பால் நிறுவன ஊழியர்கள் சங்கம் அமைத்ததற்க்காக வெளி மாநிலங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டாத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொலசன அள்ளி கிராமத்தில் ஹட்சன் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் தற்காலிகமாகவும் நிரந்தமாகவும் ஆயிரகனக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளி சந்தை ஆகிய உள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு முன்பு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தர்மபுரி டிஸ்ட்ரிக் மில்க் யூனியன் என்ற சங்கத்தைத் தொடங்கிக் குறைந்த பட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சங்கம் ஆரம்பித்த பொருப்பாளர்கள் சிலரை திடீர் என மகாராஷ்டிரா, மும்பை, தெலங்கானா மாநிலத்திற்குப் பணி மாறுதல் செய்து ஹட்சன் நிறுவனம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 150 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் இந்திய தொழிற்சங்க மையம் இன்று கிருஷ்ணகிரியில் உள்ள தொழிலாளர் துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பணி மாறுதல் செய்த ஊழியர்களுக்கு மீண்டும் தருமபுரியில் பணி வழங்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்கள் மீது பொய் புகார் கூறி வேலை நீக்கம் செய்யும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்கள் எழுப்பினர்.