மாவட்ட செய்திகள்
தாராபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 140 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல்.

தாராபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 140 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த உள்ள சின்னக்கம்பாளையம் அருகே போலீசார் வாகன தணிக்கையின் போது நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு வந்த 140 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை தாராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
உடுமலைப்பேட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது மகன் அருண் குமார் வயது (26) இவர் தனது நான்கு சக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா, கணேஷ், விமலா பாக்கு, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை உடுமலையிலிருந்து தாராபுரம் கொண்டு செல்வது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடுத்து தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில், உதவி ஆய்வாளர் கருப்புசாமி குழுவினர் மற்றும் தனிப்படை போலீசார் வேலுச்சாமி சக்திவேல் ஆகியோருடன் மதியம் 12 மணி அளவில் சின்னக்கம்பாளையம் அருகே அந்த வாகனத்தை போலீசார் சோதனையில் மேற்கொண்டனர்.

பின்னர் அரசால் தடைசெய்யப்பட்ட 140 கிலோ எடை உள்ள புகையிலை பொருள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு லட்சம் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
