மாவட்ட செய்திகள்
தஞ்சை மாநகராட்சியின் மக்கள் கோரிக்கை ஏற்று புதிய மீன் மார்க்கெட்.
தஞ்சை மாநகராட்சியின் மக்கள் கோரிக்கை ஏற்று புதிய மீன் மார்க்கெட் அமைக்கப்படும் மேலும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் இல்லாத வகையில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது நகராட்சி மேயர் ஆய்வுக்கு பின் பேட்டி.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் மற்றும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தஞ்சை மீன் மார்க்கெட் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் பேட்டியளித்த மேயர் தினமும் இரண்டு வார்டுகள் வீதம் நேரடியாக சென்று பொதுமக்களிடம் அவர்கள் தேவை கேட்டு அதற்கான நிதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும். தஞ்சை மாநகராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிக மோசமாக உள்ளது அதற்கான நிதி பெற்று சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளாக தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் முறையாக செயல்படாமல் உள்ளது கட்டிடங்கள் அனைத்தும் பயன்படுத்தாமல் பழுதடைந்துள்ளது இதற்கு பதிலாக புதிய மீன் மார்க்கெட் கட்டித்தரப்படும் இந்த இடம் வணிக பயன்பாட்டிற்காக மாநகராட்சி வருவாய்க்காக மாற்றப்படும்.
தஞ்சை மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம் இதேபோல கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் தங்களது குறைகளை மக்கள் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் தங்கள் குறைகளை வீட்டில் இருந்தபடியே மக்கள் தெரிவிக்க முடியும். தஞ்சை மாநகராட்சியில் வரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராத வகையில் கொள்ளிடத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.