மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம்,கொசவப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 600 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது
மேலும் சிறப்பாக விளையாடும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில் , எல்.இ.டி டிவி மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் மாடுபிடி வீரர்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.