BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருமணமான ஆறே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. கணவன், மாமியார் எஸ்கேப்.

கோவை தொண்டாமுத்தூர் காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் பார்த்திபன் (33). இவரது மனைவி மாலதி (வயது 20). பார்த்திபன்- மாலதி தம்பதிக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் காலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் மாலதி தூக்கில் தொங்கியுள்ளார். மரத்தில் சடலமாக மாலதி தொங்குவதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதனால் கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.


பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், தொண்டாமுத்தூர் நேரில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியப்போது, மாலதியின் கணவன், மாமியார் முருகாத்தாள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் அவர்கள் இருவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை பிடித்து விசாரித்தப்பிறகு தான் மாலதி தற்கொலைக்கான காரணம் குறித்து உண்மையான நிலவரம் தெரியவரும் என கூறுகின்றனர். இதனிடையே, வருவாய் கோட்டாச்சியர் இளங்கோவன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

புதுபெண் மாலதி தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தொடங்கவிடப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )